உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்டுக்குள் ஆட்டோ நிறுத்தக்கூடாது

பஸ் ஸ்டாண்டுக்குள் ஆட்டோ நிறுத்தக்கூடாது

அன்னுார்; 'பஸ் ஸ்டாண்டுக்குள் ஆட்டோ நிறுத்தக்கூடாது,' என அமைதி கூட்டத்தில், வருவாய் துறையினர் அறிவுறுத்தினர். அன்னுார் நகரில், மேட்டுப்பாளையம் சாலை, ஓதிமலை சாலை, கோவை சாலை, சத்தி சாலை பகுதியில் 93 பயணிகள் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சில ஆட்டோக்கள் பஸ்டாண்டில், பஸ்கள் நுழையும் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வந்தன.இது குறித்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பஸ் ஸ்டாண்டுக்குள் மறியல் போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அன்னுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் யமுனா தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதி கூட்டம் நடந்தது.கூட்டத்தில், பஸ் ஸ்டாண்டுக்குள், யாரும் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. தங்களது ஆட்டோக்களை தங்கள் பகுதியில் உள்ள ஸ்டாண்டுகளில் மட்டும் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அமைதி கூட்டத்தில் துணை தாசில்தார்கள் பெனசீர், ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை