விளையாட்டு விழாவில் அசத்திய அவினாசிலிங்கம் பள்ளி மாணவியர்
கோவை; அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.இதில், 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில், 1,050 மாணவியர் பங்கேற்றனர். 100 மீ., ஓட்டத்தில் பிரதிக் ஷா, சஞ்சனாதேவி, நித்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை நளினி பரிசுகள் வழங்கினார். மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்த மதியழகி, மாளவிகா, வாசுகி ஆகியோரும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். உடற்கல்வித்துறை பேராசிரியை சரவணபிரபா, உடற்கல்வி இயக்குனர் வேல்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.