உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு விருது

வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு விருது

கோவை : தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், 'தமிழ்நாடு விஞ்ஞானி விருது' வழங்கும் விழா சென்னையில் நடந்தது.கவுன்சிலின் தலைவரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில், வேளாண் பல்கலையின் நான்கு விஞ்ஞானிகள் விருது பெற்றனர்.பயிர் மேலாண்மையில் வினையியல் அணுகுமுறை துறையில் பங்களிப்புச் செய்தமைக்காக, திட்டமிடல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனர் ஜெயகுமார், 2018ம் ஆண்டுக்கான விருது பெற்றார்.உயிர் வினையூக்கி, செல் புரதங்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிவகுமார், 2019ம் ஆண்டுக்கான விருது பெற்றார்.வைரஸ் மற்றும் உயிரியல் கட்டுப்பாடு ஆய்வு தொடர்பாக, தாவர நோயியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் 2020ம் ஆண்டுக்கான விருது பெற்றார்.இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்கள் (டாபி) திட்டம் சார்ந்த பங்களிப்புக்காக, வனவியல் துறை பேராசிரியர் பார்த்திபன், 2021ம் ஆண்டுக்கான விருது பெற்றார்.விருதுபெற்ற விஞ்ஞானிகளை, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வாழ்த்தினார். பதிவாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை