தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு
வால்பாறை ;வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் தீத்தொண்டு நாளையொட்டி, தொழிற்சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வால்பாறை தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு வாரவிழாவையொட்டி, சோலையார் தேயிலை தொழிற்சாலை முன் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர். அதன்பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியாகம் செய்தனர்.நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் பேசியதாவது:பள்ளி நடக்கும் போது நுழைவுவாயிலில் கதவு மற்றும் அவசர வழிகளை திறந்து விட வேண்டும். குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் வெளியூர் செல்லும் போது, மின் இணைப்பு மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.சமையல் செய்யும் போது பெண்கள் காட்டன் உடைகளை பயன்படுத்த வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் காற்றோட்டம் உள்ள அறையில் வைத்து பயன்படுத்த வேண்டும். சுரக் ஷாரப்பர் டியூப்பை பயன் படுத்த வேண்டும். சமையல் செய்த பின் காஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அணைக்க வேண்டும். மரமேஜையின் மீது காஸ் அடுப்பை வைத்து பயன்படுத்தக்கூடாது. மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் உபகரணங்களையும், ஒயர்களையும் பயன்படுத்த வேண்டும். தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, பேசினார்.