மேலும் செய்திகள்
மகளிர் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா
16-Nov-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் நல பிரிவின் கீழ், பச்சிளம் குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, அபிராமி கல்லுாரி மாணவியர், கர்ப்பிணிகளுக்கும், மற்ற நோயாளிகள், உறவினர்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுத்தினர்.அதில், குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத்துவர் அமுதா, மகப்பேறு பிரிவு தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர் வித்யா நந்தினி, செவிலியர் கண்காணிப்பாளர் பொனீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
16-Nov-2024