உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை பூச்சி விரட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

இயற்கை பூச்சி விரட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே இயற்கை விவசாயத்தில் 3ஜி கரைசல் பயன்கள் குறித்து, வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சம்பரவள்ளி கிராமத்தில் ''3ஜி கரைசல்' எனப்படும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை வைத்து, இயற்கை உயிரி பூச்சிவிரட்டி தயாரிப்பு முறை, பயன்கள், பூச்சிகளுக்கு எதிரான தாக்கம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளித்து, செயல் விளக்கம் அளித்தனர்.கிராம விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மையின் பயன்களை உணர்த்தும் ஒரு முக்கிய கட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது என வேளாண் மாணவிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ