உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை ஒழிப்புக்கு விழிப்புணர்வு கண்காட்சி

புகையிலை ஒழிப்புக்கு விழிப்புணர்வு கண்காட்சி

ஆனைமலை; ஆனைமலையில், பிரம்மகுமாரிகள் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, தியானத்தின் வாயிலாக புகையிலை பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, விழிப்புணர்வு பட விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது.முக்கோணம் பஸ் ஸ்டாப்பில் நடந்த கண்காட்சியை டாக்டர்கள் ஆல்வா, தஸ்ரின்பாத்திமா, இருப்பிட மருத்துவ அலுவலர் யாசர், ஆனைமலை மகாத்மாகாந்தி ஆசிரம நிறுவனர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, சிகரெட், பீடி, புகையிலை மற்றும் மது போதை பழக்கத்தால், அடிமையாகி அறிவிழந்து, தவறான செயல்களை செய்து, வாழ்வை அவலமாக்கி விடுகின்றனர். அளவான உணவு, சத்தான ஆகாரம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் இல்லை என்றாலும் உடல் நலிந்து வாழ்வு பாழ்படும். எனவே, சுய ஒழுத்துடன் இருத்தல் வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிரம்மகுமாரிகள் அமைப்பு சகோதரி உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ