உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பான பயணத்துக்கு விழிப்புணர்வு

பாதுகாப்பான பயணத்துக்கு விழிப்புணர்வு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், போலீசார் மற்றும் அர்ஜுன் கல்லூரி சார்பில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், போலீசார் மற்றும் அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, இருசக்கர வாகனங்களில், 'ெஹல்மெட்' அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், புது பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களுக்கு, 'ெஹல்மெட்' விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை