உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தன் தானிய கிருஷி யோஜனா கரும்பு நிறுவனத்தில் விழிப்புணர்வு

தன் தானிய கிருஷி யோஜனா கரும்பு நிறுவனத்தில் விழிப்புணர்வு

கோவை: பிரதமரின், பருப்பு வகைகளில் தன்னிறைவு மற்றும் 'தன் தானிய கிருஷி யோஜனா' குறித்து, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாட்டின் 100 பின்தங்கிய மாவட்டங்களில் விவசாய முன்னேற்ற விரைவுபடுத்தும் நோக்கில் 36 துணைத் திட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சியாக தன் தானிய கிருஷி யோஜனா மற்றும், பருப்பு வகைகளில் தன்னிறைவு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன், முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிரதமரின் உரை ஒளிபரப்பப்பட்டது. கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ், பிரதமரின் புதிய முயற்சிகள், வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் குறித்து பேசினார். முகாமில், கரும்பில் ஊடுபயிராக பருப்பு வகைகளை பயிரிடல், வேளாண் இயந்திரமயமாக்கல், தாவர வகை பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள், அரசுத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. மாநில வேளாண் துறை, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், வேளாண் பல்கலை நிபுணர்களின் கலந்துரையாடல், செயல்விளக்கங்கள் இடம்பெற்றன. முதன்மை விஞ்ஞானிகள் புத்திரபிரதாப், அலர்மேலு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை