உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபிராமி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபிராமி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை; ஸ்ரீ அபிராமி கல்விநிறுவனத்தில், ராகிங் தடுப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடந்தது.இதில், கோவை மாவட்ட டி.எஸ்.பி., சுரேஷ், மதுக்கரை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்று, ராகிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், தண்டனைகள் குறித்தும், சைபர் சார்ந்து பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், பணபரிவர்த்தனையில் கவனமாக இருப்பது குறித்தும், போதை பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கமளித்தனர்.நிகழ்வில்,நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், பாலமுருகன், டீன், கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், 'நோ ஹெல்மெட் - நோ என்ட்ரி' திட்டம் இந்நிகழ்வில் துவக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை