மேலும் செய்திகள்
கோர்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
24-Jun-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர் டிரஸ்ட் கீழ் இயங்கும், பொள்ளாச்சி அருகே முத்துார் மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின், மூன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல், நாடகம், நடனம் வாயிலாக வலியுறுத்தினர்.பாதுகாப்பு நடவடிக்கைகள், சி.பி.ஆர்., முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகளை வெளிப்படுத்தினர். பள்ளி தாளாளர் பத்மபிரியா, பள்ளி முதல்வர் லலிதா, ஒருங்கிணைப்பாளர் பானுமதி, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
24-Jun-2025