உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி

தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, விபத்துகளை தவிர்க்க தலைக்கவசம் அணிவது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மேட்டுப்பாளையம் கோவை சாலையில் கோஆப்ரேடிவ் காலனி பகுதியில் இருந்து துவங்கிய இந்த வாகன பேரணியை, வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி அதியமான் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில், 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து பங்கேற்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை