உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்ப பக்தர்கள் சங்க விழா

ஐயப்ப பக்தர்கள் சங்க விழா

போத்தனூர் : கந்தராபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், மணிகண்டன் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின், 48ம் ஆண்டு விழா, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஐயப்பன் பூஜை, லட்சார்ச்சனை, உச்சி கால பூஜை, திருவிளக்கு வழிபாடு, பக்தி பாடல்கள், மகா தீபாராதனை, ஹரிவராஸனம் உள்ளிட்டவை நடந்தன.நிறைவு நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு ஐயப்ப பூஜை துவங்கியது. தொடர்ந்து தாயம்பகை, மதியம் உச்சி கால பூஜை, அன்னதானம், பக்தி இன்னிசை நடந்தன.மாலை, குறிச்சி பொங்காளியம்மன் கோவிலில் இருந்து சிறுமியர், பெண்கள் தீபத்தட்டுடன் ஐயப்பன் ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது. இரவு மகா தீபாராதனை, ஹரிவராஸனத்துடன் விழா நிறைவடைந்தது. திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ