உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அய்யப்பன் விளக்கு ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 அய்யப்பன் விளக்கு ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை: ஸ்ரீ லட்சுமி நாராயணா கோயிலில் நடந்த அய்யப்பன் விளக்கு ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுக்கரை ஏ.சி.சி. காலனியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா கோயிலில், ஜன. 14ம் தேதி வரை மண்டல மஹோற்சவம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை முதல் அலங்கார பூஜை, தீபாராதனை, நட்சத்திர பூஜை, பஜனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட யானை மீது, ஐயப்பன் சுவாமி ஊர்வலம், பாலக்காடு ரோடு, பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து, லட்சுமி நாராயணா கோவிலை அடைந்தது. சிறுமியர் விளக்கேந்தி, பாலக்கொம்பு ஏந்தி சரணகோஷமிட்டு வந்தனர். இரவு வாண வேடிக்கை நடந்தது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுக்கரை கிளை சார்பில், அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ