மேலும் செய்திகள்
புகையிலை விற்றவர்கள் கைது
18-Oct-2024
கிணத்துக்கடவு: நெகமம் அருகே, பி.ஏ.பி., கால்வாயில் ஆண் குழந்தை சடலம் மிதந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நெகமம் அருகே, ஆவலப்பம்பாளையம் பி.ஏ.பி., கால்வாயில் குழந்தை சடலம் ஒன்று மிதந்து வந்தது குறித்து அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை உறுதி செய்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், குழந்தை இறப்புக்கான காரணம்; குழந்தை யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Oct-2024