மேலும் செய்திகள்
'முடா' விசாரணை அறிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
13-Feb-2025
கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி சமர்ப்பித்த, செயல் திட்ட அறிக்கையில் உள்ள குறைகளை சரி செய்து, புதிதாக சமர்ப்பிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.வெள்ளலுார் குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்றுவது; தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு நடந்து வருகிறது.இதுவரை எடுத்த நடவடிக்கைகள்; இனி என்னென்ன பணிகள் நடைபெற இருக்கின்றன என்பது தொடர்பாக, மாநகராட்சியில் இருந்து விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், சில குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது. தவறுகளை சரி செய்து, அடுத்த விசாரணைக்கு முன், அறிக்கையை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை ஏப்., 3ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13-Feb-2025