மேலும் செய்திகள்
கடற்கரையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி
11-Nov-2024
கோவை; தீண்டாமை சுவரால் பலியான 17 பேருக்கு, பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ் புலிகள் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை, போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரால் பலியான, 17 பேருக்கு தமிழ் புலிகள் கட்சி கோவை வடக்கு மாவட்டம் சார்பில், மேட்டுப்பாளையத்தில் நேற்று பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில் போலீசார் பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே வசித்து வரும், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கைது செய்தனர். தொடர்ந்து அவரை வீட்டு காவலில் வைத்தனர்.அதேபோல அக்கட்சியைச் சேர்ந்த இளவேனில், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே, காரமடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
11-Nov-2024