உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் ஏலம் விற்பனை மந்தம்..

வாழைத்தார் ஏலம் விற்பனை மந்தம்..

கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை மந்தமாக உள்ளது, என, வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சராசரியாக இருக்கும் நிலையில், விற்பனை விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தற்போது மார்க்கெட்டில், ஒரு கிலோ செவ்வாழை - 65 ரூபாய், நேந்திரன் --- 30, ரஸ்தாளி --- 40, கதளி -- 25 முதல் 30 வரை; பூவன் --- 20, சாம்பிராணி -- 35 ரூபாய்க்கு விற்பனை ஆனது.வியாபாரிகள் கூறியதாவது, 'இந்தவாரம் மார்க்கெட்டில், 200 வாழைத்தார்கள் வரை வரத்து இருந்தது. இதில், பூவன் வகை தார் விலை குறைந்து காணப்பட்டது, விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை. மற்ற வாழைத்தார் ரகங்கள் விற்பனை விலையில் பெரிய மாற்றம் இன்றி காணப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். வரும் வாரங்களில் வாழைத்தார் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ