உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர எதிர்பார்ப்பு

வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர எதிர்பார்ப்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு, வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யும் வாழைத்தார்களை, தினசரி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.தினசரி மார்க்கெட்டில், நேற்று (4ம் தேதி), செவ்வாழை (கிலோ) - 70, நேந்திரன் --- 40, கதளி --- 28, பூவன் --- 35, ரஸ்தாளி --- 40, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை காட்டிலும், கதளி வாழைத்தார் மட்டும், கிலோவுக்கு 2 ரூபாய் விலை குறைந்துள்ளது. மற்ற ரக வாழைத்தார் விலையில் மாற்றமில்லை. இந்த வாரம் அனைத்து வகை வாழைத்தார்களும் வரத்து இருந்தாலும், அளவில் குறைவாகவே இருந்தது.வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று மார்க்கெட்டில் வாழைத்தார்கள் வரத்து குறைவாக இருந்தது. தொடர் மழை குறைந்திருப்பதாலும், முகூர்த்த நாட்கள் இனி வரவிருப்பதாலும், வாழைத்தார்கள் விலை அதிகரிக்கும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !