பண்ணாரி அம்மன் - ஆரக்கிள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை; சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் பெங்களூரு ஆரக்கிள் நிறுவனம் இடையே, தொழில்முறை மேம்பாட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆரக்கிள் பல்கலை பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆரக்கிள் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் பிஜோய் அலெக்ஸ், பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மூத்த சர்வீஸ் சால்யூஷன் ஆர்கிடெக்ட் சுரேந்திர பாபு ஆகியோர் பங்கேற்றனர்.பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், கல்லுாரி முதல்வர் பழனிசாமி, டீன் சிவகுமார், டெக்னாலஜி மற்றும் டெவலப்மென்ட் பிரிவின் தலைவர் தீபா, பேராசிரியர்கள் கார்த்திக், பூங்கொடி, ஈஸ்வரமூர்த்தி நிர்மல்குமார் பங்கேற்றனர். ஒப்பந்தம் வாயிலாக, ஆரக்கிள் சான்றளிக்கப்பட்ட பயிற்சி திட்டங்கள், வேலைகள் மற்றும் கூட்டு திட்டங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கெள்ள முடியும் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.