உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதி செய்து தரலை; ஸ்ரீ கார்டன் மக்கள் ஆதங்கம்

அடிப்படை வசதி செய்து தரலை; ஸ்ரீ கார்டன் மக்கள் ஆதங்கம்

கோவில்பாளையம்; 'அடிப்படை வசதிக்காக 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம்,' என ஸ்ரீ கார்டன் குடியிருப்போர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, குரும்பபாளையம் பகுதியில், 12வது வார்டுக்கு உட்பட்டது ஸ்ரீ கார்டன்.இங்கு உள்ள ஸ்ரீ கார்டன் வில்லாஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கூறுகையில், 'எங்கள் பகுதியில், சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை. போதுமான அளவு குடிநீர் வழங்குவதில்லை. பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுகின்றனர்.கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதற்காக 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கோவை கலெக்டர் அலுவலகம், முதல்வரின் தனிப் பிரிவுக்கு பலமுறை மனு அனுப்பி விட்டோம்.கடந்தாண்டு அக்டோபரில் இந்த கோரிக்கைகளுக்காக, மறியல் செய்வதாக அறிவித்தோம். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு உறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் மொத்தம் உள்ள ஐந்து தெருக்களில் இரண்டு தெருக்களுக்கு மட்டும் பாதை அமைத்துக் கொடுத்தனர்.அதன் பிறகு மற்ற தெருக்களுக்கு பாதை அமைக்கவில்லை. மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இதனால் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கிறோம்,'இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ