மேலும் செய்திகள்
படகுசவாரி துவங்கணும் கலெக்டருக்கு கோரிக்கை
18-Sep-2026
வால்பாறை: வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிகளவில் செல்லும் காட்சிமுனை பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிருப்தியடைந்துள்ளனர். வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பகலில் மிதமான வெயிலும், காலை, மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசுவதால் சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாபயணியர் வால்பாறை வருகின்றனர். சமீப காலமாக வார விடுமுறை நாட்களில் கூட அதிக அளவில் சுற்றுலா பயணியர் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணியர் விரும்பி செல்லும் கவர்க்கல் தலநார் வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அருவி, நல்லமுடி காட்சி முனை உள்ளிட்ட இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணியர் கூறியதாவது: வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆர்வத்துடன் வருகிறோம். வனத்துறை சார்பில், 40 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அருவிகளில் பெண்கள் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதிகள் இல்லை. இதே போல், நல்லமுடி காட்சி முனைப்பகுதிக்கு செல்லும் பாதை கரடுமுரடாக உள்ளது. இங்கு பார்க்கிங் வசதியும் இல்லை. எனவே, கட்டணத்தை வசூலிக்கும் வனத்துறையினர், போதிய அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.
18-Sep-2026