உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வருக்கு சக்தி தர வேண்டி பாரத் சேனா அங்கபிரதட்சணம்

முதல்வருக்கு சக்தி தர வேண்டி பாரத் சேனா அங்கபிரதட்சணம்

கோவை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தில், கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு சக்தி வழங்க வேண்டி, பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள், கோவை தண்டு மாரியம்மன் கோவிலில், அங்க பிரதட்சணம் செய்தனர்.பாரத் சேனா தலைவர் செந்தில்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் போதை கலாசாரத்துக்கு இணையாக, பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டிய தி.மு.க., அரசு மவுனம் சாதிக்கிறது. பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் தி.மு.க.,வை சேர்ந்தவர். தவறுக்கு மேல் தவறு செய்பவர்களுக்கு, தி.மு.க., அடைக்கலம் கொடுக்கிறது.இது போன்ற சம்பவங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்கான சக்தியை தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, தண்டுமாரியம்மன் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து, அங்கப்பிரதட்சனம் செய்துள்ளோம்.அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து, அடிக்கடி போராட்டம் நடத்தும், மாதர் சங்கம், மகளிர் அமைப்புகள் ஏன் போராட்டங்களில் ஈடுபடவில்லை?இவ்வாறு, செந்தில்கண்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை