உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை ஹேண்ட்பால் போட்டி; துடிப்புடன் விளையாடும் வீராங்கனைகள்

பாரதியார் பல்கலை ஹேண்ட்பால் போட்டி; துடிப்புடன் விளையாடும் வீராங்கனைகள்

கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில், 10 அணிகள் களம் கண்டுள்ளன.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளுக்கு இடையேயான, பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டிகள், நிர்மலா மகளிர் கல்லுாரியில் கடந்த டிச., 13, 14ம் தேதிகளில் நடக்கவிருந்தன. 10 கல்லுாரி அணிகள் பங்கேற்க பதிவு செய்திருந்தன.மழை காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் போட்டியில், பாரதியார் பல்கலை அணி, 19-2 என்ற புள்ளி கணக்கில், கோவை அரசு கலைக் கல்லுாரி அணியை வென்றது.தொடர்ந்து, என்.ஜி.எம்., கல்லுாரி அணி, 12-2 என்ற புள்ளிக்கணக்கில், ஸ்ரீ ஜி.வி.ஜி., கல்லுாரி அணியையும், பி.எஸ்.ஜி., கலைக் கல்லுாரி அணி, 16-6 என்ற புள்ளிக்கணக்கில் காங்கேயம் வணிக கல்லுாரியையும், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி, 22-3 என்ற புள்ளிக்கணக்கில், திருப்பூர் குமரன் கல்லுாரி அணியையும் வென்றன.பாரதியார் பல்கலை அணி, 13-5 என்ற புள்ளிக்கணக்கில் வெள்ளாளர் கல்லுாரி அணியையும், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 28-7 என்ற புள்ளிக்கணக்கில் என்.ஜி.எம்., கல்லுாரி அணியையும், பாரதியார் பல்கலை அணி, 19-14 என்ற புள்ளிக்கணக்கில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியையும் வென்றன. நிர்மலா கல்லுாரி அணி, 37-7 என்ற புள்ளிக்கணக்கில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை