உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் பாரதியார் பல்கலை கபடி போட்டி

ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் பாரதியார் பல்கலை கபடி போட்டி

கோவை:பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே 'சி-மண்டலம்' கபடி போட்டி, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் நடந்தது. மாணவியருக்கான இப்போட்டியில், 14 அணிகள் பங்கேற்றுள்ளன. கல்லுாரி பொருளாளர் சஜீஷ் குமார், போட்டியை துவக்கி வைத்தார். முதல் போட்டியில், வித்யாசாகர் கல்லுாரி அணியும், கமலம் கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. இதில், 56-14 என்ற புள்ளிகளில் கமலம் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி அணி, 53-26 என்ற புள்ளிகளில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி அணியை வெற்றி பெற்றது. பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரி அணி, 72-7 என்ற புள்ளிகளில், வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லுாரி அணியை வென்றது. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலிறுதி போட்டியில், எஸ்.டி.சி. கல்லுாரி அணி, 35-32 என்ற புள்ளிகளில் கமலம் கல்லுாரி அணியையும், இரண்டாம் காலிறுதியில் அக்சயா கல்லுாரி அணி, 36-26 என்ற புள்ளிகளில், நாராயண குரு கல்லுாரி அணியையும் வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை