உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை சிண்டிகேட் புது உறுப்பினர்களுக்கு பாராட்டு

பாரதியார் பல்கலை சிண்டிகேட் புது உறுப்பினர்களுக்கு பாராட்டு

கோவை:கோவை பாரதியார் பல்கலைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு, தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, நீலாம்பூர் லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது. ஜெ.சி.டி., கல்லுாரி செயலர் துர்கா சங்கர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி செயலர் மலர்விழி, ரத்தினம் கல்லுாரி தலைவர் மதன் செந்தில், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலர் தரணிதரன், பிஷப் அம்புரோஸ் கல்லுாரி செயலர் ராக் டொமினிக் எக்ஸ்படைட் ஜெரோம் ஆகிய புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேலுவும் கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. வரவு செலவு கணக்கு, ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி இயக்குனர் மற்றும் தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கத்தின் தலைவரான வாசுகி, பொருளாளர் ஸ்ரீகுமார் பார்ம்ரா, செயலாளர் விகாஸ் சுராணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை