உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பிறந்த நாள் விழா

பாரதியார் பிறந்த நாள் விழா

சூலுார்; கண்ணம்பாளையத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.கண்ணம்பாளையம் பாரதி பசியாற உணவு அறக்கட்டளை சார்பில், மகாகவி பாரதியாரின், 142 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்று மகாகவியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர்.கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மவுனசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் தலைவர் அங்கமுத்து, அறக்கட்டளை செயலாளர் வேலுசாமி, கவுன்சிலர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பாரதியாரின் எழுச்சிமிகு பாடல்கள் குறித்தும், சமுதாய விழிப்புணர்வு, பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ