கணபதி அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்
கணபதி: கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் பயிலும் 135 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் ரூ.8.36 கோடி மதிப்பில், 17,782 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கதிரி மில்ஸ் அரசு உதவிபெறும் பள்ளி, கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட எட்டு பள்ளிகளுக்கு, 350 ஆண்கள் சைக்கிள்கள் மற்றும் 519 பெண்கள் சைக்கிள்கள் என மொத்தம், 869 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளின் தேவையை கருத்தில் கொண்டு, உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் கோவை எம்.பி.,ராஜ்குமார், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.