செங்கல் தலையில் விழுந்து பீஹார் தொழிலாளி பலி
கோவில்பாளையம்; கட்டுமான பணியின்போது, செங்கல் தலையில் விழுந்ததில், பீஹார் தொழிலாளி இறந்தார். வையம்பாளையத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பீஹார் மாநிலம், ராஜ்புரை சேர்ந்த, முகமது ஆரிப் மகன் முகமது சலீம், 43. என்பவர் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இவர் தரைத் தளத்தில் பணிபுரிந்த போது, முதல் தளத்திலிருந்து செங்கல் இவர் தலைமீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு உரிமையாளர் சத்தியநாராயணன் மற்றும் பொறியாளர் முகமது பர்டரிம் விசாரித்து வருகின்றனர்.