பைக்குகள் தீ வைத்து எரிப்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 34, சி.சி.டி.வி., கேமரா நெட்வொர்க்கிங் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14ம் தேதி இரவு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். பின், இயேசு துரை சந்து பகுதியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலை வெடி சத்தம் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்து எழுந்து வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது பைக்கும் தீயில் எரிந்து சேதமாகி இருந்தது. இதுகுறித்து, ஆனந்தகுமார் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.