உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பில்லூர் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் துவக்கம்

 பில்லூர் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் துவக்கம்

சூலூர்: சிந்தாமணிப்புதூரில் இருந்து ரங்கநாதபுரம் பிரிவு வரையில் உள்ள, பழைய பில்லுர் குடிநீர் பிரதான குழாய்களை மாற்றும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. சூலூர் திருச்சி ரோட்டில் சிந்தாமணி புதூர் முதல், ரங்கநாதபுரம் பிரிவு வரை, ஏழு கி.மீ., தூரத்துக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், சிமென்டால் ஆன பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டன. இதன் வாயிலாக, கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சிகள், கலங்கல் ஊராட்சி, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, இடையர் பாளையம், கள்ளப்பாளையம் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளையாகிறது. குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் வீணாகி வந்ததால், பழைய குழாய்களை மாற்றி, புது குழாய்கள் அமைக்க வேண்டும் என, கண்ணம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின், குடிநீர் வடிகால் வாரியம் குழாய்களை மாற்ற முடிவு செய்தது. 6 கோடி ரூபாய் இப்பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன் பணிகளை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் புஷ்பலதா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை