உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர போராட்ட தியாகியின் வாழ்க்கை வரலாறு வெளியீடு

சுதந்திர போராட்ட தியாகியின் வாழ்க்கை வரலாறு வெளியீடு

போத்தனுார்; போத்தனுாரில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில், சுதந்திர போராட்ட தியாகி ஆதிநாராயண செட்டியாரின், 150வது ஆண்டு விழா முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது. கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், ரூட்ஸ் குழும இயக்குனர் கவிதாசன் ஆகியோர், வி.ஜி.எம்., மருத்துவமனை நிறுவன தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் முன்னிலையில் வெளி யிட்டனர். சுதந்திர போராட்ட தியாகியும், தனது கொள்ளு தாத்தாவுமான ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை டாக்டர் மோகன் பிரசாத் நினைவு கூர்ந்தார். ரத்தினம் கல்வி குழும தலைமை செயல் அலுவலர் மாணிக்கம், ரோட்டரி சங்கத்தின் ரவீந்திரன், ராகவேந்திரன், விஜய் கிருஷ்ணா, செல்வகுமார், ரத்தினம் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வி.ஜி.எம்., அறக்கட்டளை மற்றும் கோயம்புத்துார் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ