உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சம் மரக்கன்று திட்டம் நாளை துவக்க பா.ஜ. முடிவு

லட்சம் மரக்கன்று திட்டம் நாளை துவக்க பா.ஜ. முடிவு

போத்தனுார்; பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்குவதற்கான துவக்க நிகழ்ச்சி நடக்கிறது. கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: 'நம்ம மோடி, நாம் கொண்டாடுவோம், சேவையும், கொண்டாட்டமும்' என்கிற பெயரில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை போத்தனுார் - செட்டிபாளையம் சாலையில், பிருந்தாவன் பள்ளி அருகே நடக்கும் நிகழ்ச்சியில், ஒரு லட்சம் மரக்கன்று மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் இவ்வாண்டு அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்படும். இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவு கட்டணம் பிருந்தாவன் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களுக்கு இலவசமாக நடத்தப்படும். இவ்வாறு, அவர்கூறினார். கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை