1,008 திருவிளக்கு பூஜை; பா.ஜ., அழைப்பு
அன்னுார்; திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், வருகிற செப். 19ம் தேதி மாவட்ட அளவில் முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் 11 ஆண்டு சாதனை பிரசார துவக்க விழா, வாஜ்பாய் நூற்றாண்டு விழா, 1008 திருவிளக்கு பூஜை ஆகியவை இணைந்து நடைபெற உள்ளன. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகளிரணி மாநில தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அன்னுாரில் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பேசினார். பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் பிரியதர்ஷினி, செயலாளர் ராஜராஜ சாமி, துணைத் தலைவர் முருகேசன் ஒருங்கிணைப்பாளர் பிரபாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.