மேலும் செய்திகள்
அண்ணாமலை கைதை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
18-Feb-2025
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்ததை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து, சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.இதை கண்டித்து, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, நகர பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு, மாவட்ட பொதுச் செயலாளர் துரை, மாவட்ட துணை தலைவர் சாந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 21 பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.அதேபோன்று, ஆனைமலை முக்கோணம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ.,வினர், 22 பேரை போலீசார் கைது செய்தனர்.* வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பாக, பா.ஜ., மண்டல் பொதுச்செயலாளர் சுனில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் வினு, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.* கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.கோவில்பாளையம் பஸ் ஸ்டாப்பில், தெற்கு ஒன்றிய தலைவர் ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போன்று நெகமம் பகுதியில் முன்னாள் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சத்தியசுதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 62 பேரை போலீசார் கைது செய்தனர்.* தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக்கண்டித்து, உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., கட்சியினர், 30 பேரை போலீசார் கைது செய்தனர். - நிருபர் குழு -
18-Feb-2025