உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு பள்ளி பெண்கள் கபடி அணிக்கு பா.ஜ.,வினர் உதவி

 அரசு பள்ளி பெண்கள் கபடி அணிக்கு பா.ஜ.,வினர் உதவி

சூலூர்: சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கபடி அணிக்கு, பா.ஜ., மகளிர் அணியினர் உதவி செய்தனர். திருச்சி கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடக்கிறது. இப்போட்டிகளில் விளையாட, சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி தேர்வாகி உள்ளது. அந்த அணிக்கு தேவையான பணம், உணவு பொருட்கள், மருத்துவ முதலுதவி பொருட்களை, சூலூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ., மகளிரணி மற்றும் மண்டல் நிர்வாகிகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி ஆசிரியைகள், பா.ஜ., நிர்வாகிகள் அசோக், ரவிச்சந்திரன், மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை