100 இடங்களில் பா.ஜ., தெருமுனை பிரசாரம்
அன்னுார்; கோவை வடக்கு மாவட்டத்தில், 100 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்ய பா.ஜ., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அன்னுாரில் நேற்று நடந்தது. கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில், மத்திய அரசின் மும்மொழி கொள்கை மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கியும், தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த, 1,000 கோடி ரூபாய் முறைகேட்டை கண்டித்தும், அவிநாசி, மேட்டுப்பாளையம், சூலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை, 100 இடங்களில் தெருமுனைப் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டது.அவிநாசி நகரத் தலைவர் தினேஷ், அமைப்புசாரா அணி மாநில செயலாளர் மயில்சாமி, மாவட்ட செயலாளர் சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் சங்கீதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.