மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு
14-Jan-2025
அன்னுார்; அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக பா.ஜ.,வில் கிளை நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதையடுத்து ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அன்னுார் அருகே எல்லப் பாளையத்தில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.இதில் தேர்தல் அதிகாரியாக மாரிமுத்து, உதவி தேர்தல் அதிகாரிகளாக முரளி, ஜெயபால் ஆகியோர் பணியாற்றினர்.இதில் அன்னுார் வடக்கு ஒன்றிய தலைவராக குமாரபாளையத்தை சேர்ந்த ஆனந்தன், 36. தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னதாக பட்டியலின அணியில் ஒன்றிய தலைவராகவும், பா.ஜ., முழு நேர ஊழியராகவும் பணிபுரிந்துள்ளார்.
14-Jan-2025