உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி. மு.க. முடிவை வரவேற்ற பா.ஜ.,

தி. மு.க. முடிவை வரவேற்ற பா.ஜ.,

கோவை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்வைத்த தொகுதி மறுவரைவு மசோதாவை லோக்சபாவில் ஆதரிக்க தி.மு.க., எடுத்த முடிவை, தமிழக பா.ஜ.,தொழில் துறை வல்லுநர் பிரிவு வரவேற்றுள்ளது. பா.ஜ., தொழில்துறை வல்லுநர் பிரிவு சுந்தர் ராமன் அறிக்கை: லோக்சபா தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது மத்திய அரசின் முன்மொழிவு. அதன்படி, தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பங்கு காக்கப்படும். தமிழகத்துக்கான தொகுதி எண்ணிக்கை உயரும். இந்த ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை ஸ்டாலின் தெளிவாக எடுத்துரைத்திருப்பது பாராட்டுக்குரியது. கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தின் பிரதிநிதித்துவம், தென் மாநிலங்களின் நலன், தேசநலன் ஆகியவற்றை முன்னிறுத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பதை இந்த முடிவு காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ