உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காப்பகம் கட்ட நிதி கேட்கிறார்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

காப்பகம் கட்ட நிதி கேட்கிறார்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

கோவை; கோவை ஒத்தக்கால் மண்டபத்தை அடுத்துள்ள அரிசிபாளையத்தில், கட்டப்பட்டு வரும் பார்வையற்ற மாற்றுத்திறன் முதியோர்களுக்கான, காப்பகத்தின் கட்டுமானப்பணி, நிதி பற்றாக்குறையால் பாதியில் நிற்கிறது.தேசிய பார்வையற்றோர் இணையம் மேற்கு கிளை ஒருகிணைப்பாளர் சதாசிவம் கூறியதாவது:அரிசிபாளையத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம் - தனபாக்கியம் தம்பதியர் தங்களுக்கு சொந்தமான, 32 சென்ட் நிலத்தை, பார்வையற்றோர் காப்பகம் கட்டிக்கொள்ள, நன்கொடையாக அளித்தனர்.பொதுமக்களிடம், புரவலர்களிடம் நிதி உதவி பெற்று, 75 சதவீதம் கட்டுமானப்பணிகளை முடித்து இருக்கிறோம். இன்னும் 25 சதவீதம் கட்டுமான வேலைகள் பாக்கி உள்ளன.பொதுமக்கள் நிதி உதவி செய்தால், மீதம் உள்ள கட்டுமான பணிகளை முடித்து விடுவோம். பணமாகவோ, கட்டுமான பொருட்களாகவோ கொடுத்து உதவ வேண்டுகிறோம்.அரிமா, ரோட்டரி, தனியார் நிறுவனத்தினர், தங்களால் முடிந்தளவு உதவலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.கருணை மனம் கொண்டவர்கள், 89030 01608 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை