உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொறியியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்

பொறியியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், நாட்டுநலப்பணித்திட்டம், என்.ஐ.ஏ., விரிவாக்க சேவை துறை, சக்திபுரா, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, இந்திய மருத்துவ கழகம் மற்றும் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அசோக், மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன், டாக்டர் செல்வகுமார், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முகாமில், மாணவர்களிடம் இருந்து, 160 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை