முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் ரத்த தானம்
சூலுார்; முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், பிறந்தநாளை ஒட்டி, சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., மற்றும் சூலுார் அரிமா சங்க ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.முன்னதாக வாஜ்பாயின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அவரது ஆட்சிக்கால சாதனைகள் குறித்து நிர்வாகிகள் பேசினர். 29 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.மாவட்ட கவுன்சிலர் கோபால்சாமி, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதேபோல், சின்னியம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிர்வாகி சின்னதுரை தலைமையில் வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கருமத்தம்பட்டி, இருகூர், பீடம் பள்ளி, சோமனூர் பகுதியிலும் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவை கட்சியினர் கொண்டாடினர். அன்னூர்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னூர், ஓதிமலை ரோடு சந்திப்பில், வடக்கு ஒன்றிய தலைவர் திருமூர்த்தி தலைமையில், கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. தங்க நாற்கரச் சாலை உள்ளிட்ட வாஜ்பாய் அரசின் சாதனைகள் குறித்து, ஒன்றிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசினார். நிர்வாகிகள் அசோக்குமார், முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதுப்பாளையத்தில் நடந்த விழாவில் பிரச்சார அணி மாவட்ட செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.அன்னூர் தெற்கு ஒன்றியத்தில் கணேசபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அன்னூர் ஒன்றியத்தில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.