உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் குருத்து அழுகலா? புளூகாப்பர் கரைசல் ஊற்றணும்

தென்னையில் குருத்து அழுகலா? புளூகாப்பர் கரைசல் ஊற்றணும்

கிணத்துக்கடவு:தென்னையில், குருத்து அழுகல் நோய்க்கு தீர்வாக தமிழ்நாடு வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஆனந்தராஜா விளக்கம் அளித்துள்ளார்.கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவு உள்ளது. இந்நிலையில், தென்னையில் குருத்து அழுகல் நோய் குறித்து, தமிழ்நாடு வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஆனந்தராஜா கூறியதாவது:தென்னையில், குருத்து அழுகல் தவிர்க்க, தண்ணீர் அதிக அளவு தேக்குதல் கூடாது. குறிப்பாக, சொட்டுநீர் பாசனம் அல்லது கால்வாய் பாசனத்தில், குருத்து நனையும் படி தண்ணீர் கட்ட கூடாது. அவ்வாறு தண்ணீர் தேக்கினால், தண்ணீர் குருத்தில் சேர்ந்து அழுகல் நோய் ஏற்படும்.இந்த நோயை கட்டுப்படுத்த, அழுகிப்போன குருத்தை எடுத்துவிட்டு, நான்கு லிட்டர் தண்ணீரில், 40 கிராம் காப்பர் ஆக்சிகுளோரைடு (புளூ காப்பர்) கலந்து, குருத்து அழுகிப்போன பகுதி மற்றும் கண்ணை சுற்றிலும், ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை ஊற்றினால், கன்று சரியாகிவிடும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்