மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
23-May-2025
சூலூர்: சூலூர் அருகே காட்டில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை, போலீசார் மீட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் -- வெள்ளானைப்பட்டி ரோட்டில் பாக்கு தோப்பு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறம் உள்ள காட்டில், முகம் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.சடலமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். முகம் சிதைக்கப்பட்டிருப்பதால், வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என்ற கோணத்தில் விசாரணையை துவக்கி உள்ளனர்.
23-May-2025