ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஐ.டி.ஐ., மாணவர் உடல் மீட்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சாமன்னா வாட்டர் பம்ப் ஹவுஸ் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு, துடியலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வரும் ஐந்து மாணவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி காலை குளித்தனர். இதில் சரவணன், 17, என்ற மாணவர் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால், பவானி ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். மீதமுள்ள நான்கு மாணவர்கள் கரைக்கு வந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காணாமல் போன சரவணனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இரண்டு நாள் தேடுதலுக்கு பிறகு மாணவனின் உடல் நேற்று முன் தினம் மாலை மீட்கப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.---