உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரை காய்ச்சி குடியுங்க! சுகாதாரத்துறை அட்வைஸ்

குடிநீரை காய்ச்சி குடியுங்க! சுகாதாரத்துறை அட்வைஸ்

வால்பாறை; வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. தொடர் மழையால் இங்குள்ள, ஆறு மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனால், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் பருவமழை பெய்து வருவதாலும், சீதோஷ்ணநிலை மாற்றத்தாலும், கடும் பனிப்பொழி மற்றும் கடுங்குளிரும் நிலவுவதாலும், மக்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல வேண்டும்.இந்த சீதோஷ்ண நிலைக்கு, காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பு இருந்தால், தன்னிச்சையாக மருந்து எடுக்காமல், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, டாக்டர் பரிந்துரை படி மருந்து பெற்று உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி