நுால் விமர்சன கருத்தரங்கம்
கோவை: கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் கோவை வாசகசாலை சார்பில், 52வது இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், கவிஞர் இசை எழுதி, 'கரகரப்பின் மதுரம்' என்ற கட்டுரை நுால் குறித்த, உதவிப் பேராசிரியர் சுவலட்சுமி மற்றும் சுபாஷிணி ஆகியோர், கருத்துரை வழங்கினர். இதில், கவிஞர் இசையின் கட்டுரை தொகுப்பு குறித்தும் அவரது எழுத்து நடை, கவிதைகள், அவர் சொன்ன அனுபவங்கள் என அனைத்தையும் தொகுத்து, கருத்துரை வழங்கினர். இந்த கூட்டத்தில், 50க்கு மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.