உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலக வாரவிழா கொண்டாட்டம்

நுாலக வாரவிழா கொண்டாட்டம்

வால்பாறை; வால்பாறை கிளை நுாலகத்தில், தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.வால்பாறை நகரில் உள்ள கிளை நுாலகத்தில், தேசிய நுாலக வார விழா நுாலகர் தனபாலன் தலைமையில் நடந்தது. நுாலகத்தில் உள்ள புதிய நுால்களை வாசகர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, விரும்பிய நுால்களை படித்தனர்.நுாலக அதிகாரிகள் கூறுகையில், 'வீட்டிலும், வெளியிடங்களிலும் மாணவர்கள் மொபைல்போனில் நேரத்தை வீணடிக்காமல், நுாலத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற நுால்களை படித்து, பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பாக, அன்றாடம் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு, நுாலகத்தில் தேவையான நுால்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் நுாலகங்களை பயன்படுத்தி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி