உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஊழியர்களுக்கு ராக்கி கயிறு; பிரம்ம குமாரிகள் கட்டினர்

அரசு ஊழியர்களுக்கு ராக்கி கயிறு; பிரம்ம குமாரிகள் கட்டினர்

மேட்டுப்பாளையம்; அஞ்சல் அலுவலக பணியாளர்களுக்கு, பிரம்ம குமாரிகள் ராக்கி கயிறு கட்டி வாழ்த்தினர். ரக்சா பந்தன் விழாவை அடுத்து, மேட்டுப்பாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர், அரசு அலுவலகங்களுக்கு சென்று, பணியாளர்களுக்கு ராக்கி கயிறு கட்டி வருகின்றனர். நேற்று மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு, நகர பிரம்ம குமாரிகள் அமைப்பின், தலைமை நிர்வாகி சொர்ணம் மற்றும் பிரம்ம குமாரிகள் சென்றனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்களுக்கு சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ராக்கி கயிறு கட்டினர். அஞ்சல் அலுவலக தலைமை அதிகாரி நாகஜோதி உட்பட அலுவலகத்தில் பணியாற்றும், அனைத்து பணியாளர்களுக்கும் பிரம்ம குமாரிகள், ராக்கி கயிறுகளை கட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி