சிங்காநல்லுார் பகுதியில் இரவில் பூத்த பிரம்ம கமலம்
கோவை: ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூவானது, இரவு நேரத்தில் பூத்து சூரிய உதயத்திற்கு முன்பு சுருங்கி விடும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இப்பூவானது, மலர்ந்தவுடன் மணம் வீசும் தன்மையுடையது. தெய்வங்களுக்கு உகந்த பூவாகவும் கருதப்படுவதால், பூ மலர்ந்தவுடன் பூஜை செய்பவர்கள் அதிகம். சிங்காநல்லுார்-வெள்ளலுார் ரோட்டில், சித்திரபுத்திர எமதர்மராஜா கோவில் அருகே, ஓய்வு பெற்ற ஆர்.எம்.எஸ்., அலுவலர் காளிமுத்து-வளர்மதி தம்பதியர் வீட்டில், நேற்று முன்தினம் இரவு, 8:15 மணிக்கு பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன. அருகே வசிப்பவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து சென்றனர்.